விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஏற்கனவே இரண்டு முறை காதல் வயப்பட்டு அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக கூட கிசுகிசுக்கப்படுகிறது.
சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா. தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் இருவரும் ஒன்றாக காதல் பறவைகளாய் உலா வருகின்றனர். இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களும் இணையங்களில் வைரலாகியுள்ளன. இருவரும் தீவிரமாக காதலித்து வரும் நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.