பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் சாகித் கபூர் நடிப்பில் சரித்திர படமாக பத்மாவதி படம் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வருகிறார் சஞ்சய். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், டிசம்பர் 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
அந்த தேதியில் தான் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிப்பில் உருவாகி வரும் 102 நாட் அவுட் படமும் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 102 நாட் அவுட் படத்தை இருவாரங்கள் தள்ளி வைத்துள்ளனர். பத்மாவதி உடனான மோதலை தவிர்க்கும் விதமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளதாக கூறப்படுகிறது.
102 நாட் அவுட் படத்தில், 102 வயது அப்பாவாக அமிதாப்பும், அவரது 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடிக்கின்றனர். அப்பா-மகன் இடையேயான பாசத்தை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார் உமேஷ் சுக்லா.