‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்த ஆண்டு தீபாவளிக்கு ஸ்டார் அட்ராக்ஷன் ஓவியாதான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த திடீர் புகழை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஓவியா. முன்னணி வியாபார நிறுவனங்கள் ஓவியாவைக் கொண்டு தீபாவளி விளம்பரங்களை தயாரித்துள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார் ஓவியா. ஒரு ஜவுளிக்கடை விளம்பரம், மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவும் பல லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
இது தவிர இந்த ஆண்டு பல ஜவுளி நிறுவனங்கள் தீபாவளிக்கு ஓவியா சேலைகளை அறிமுகப்படுத்துகிறது. ஓவியா வளையல், தோடும் விற்பனைக்கு வருகிறது. அதிக வண்ணங்கள் நிறைந்த சேலையை ஓவியா சேலையாக அறிமுப்படுத்துகின்றன. அதோடு சிவாகாசியில் ஓவியா பட்டாசுகள் தயாராகி வருகிறது. அதிக ஒளியை உமிழும் பட்டாசுகளுக்கு ஓவியா பட்டாசு என்ற பெயர் சூட்டியுள்ளனர். அந்த பட்டாசுகளின் மீதும், அதன் அட்டைபெட்டிகள் மீதும் ஓவியா படத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றார்கள். இது தவிர ஓவியா கிப்ட் பாக்ஸ் ஒன்றையும் ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. ஆக இந்த வருட தீபாவளி ஓவியா தீபாவளியாகிறது.