டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் கோல்மால் அகைன் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டனர். டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொண்டனர். டிரைலர் வெளியீட்டிற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கோல்மால் படத்தின் 4வது பாகத்தை இயக்க எதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் என ரோஹித் ஷெட்டியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரோஹித் ஷெட்டி, சரியான கதைக்காக நாங்கள் காத்திருந்தோம். கோல்மால் பெயரில் மோசமான கதையை கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை. அதனால் கடுமையாக உழைத்து இந்த கதையை உருவாக்கினோம். எங்களின் முயற்சி உறுதியாக வெற்றி அடைந்தது. இப்போது படமும் தயாராகி விட்டது என்றார்.
ரோஹித் ஷெட்டி இயக்கும் கோல்மால் அகைன் படத்தை மங்கள் மூர்த்தி பிலிம்ஸ் உடன் இணைந்து ரோஹித் ஷெட்டியே தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, பரினீதி சோப்ரா, அர்ஷத் வர்ஷி, குணால் கேமு, ஸ்ரேயாஸ் தல்பாடே, துஷர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 20 ம் தேதி ரிலீசாக உள்ளது.