சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கேரள மற்றும் டில்லி முதல்வரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், அடுத்தப்படியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் நான் அரசியல் களத்திற்கு வரத் தயார் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுல்ல தமிழக மக்களின் நலனுக்காக தான் முதல்வராகவும் தயார் என்று கூறியுள்ளார்.
கமலின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் ரீதியான செயல்களாகவே இருக்கிறது. சமீபத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அதன்பின்னர் சென்னை வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் கமல்.
ஊழலுக்கு எதிராக தோள் கொடுக்கும் அனைவரும் என் நண்பர்கள் என்று பேசிய கமல், அடுத்தப்படியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அரசியல் குறித்த தமது நிலைப்பாட்டை தெரிவிக்க இருப்பதாகவும், இதுதொடர்பாக மம்தாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் இவர்களது சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
கமல் தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.,வை சார்ந்திராத கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் மம்தாவையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.