அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
உலகளவில் பிரபலமான WWE எனும் மல்யுத்த விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பெருமை சேர்த்தவர் திலீப் சிங் ராணா எனும் கிரேட் காளி. தற்போது முழுமையாக அந்த போட்டியில் பங்கேற்காவிட்டாலும் அவ்வப்போது என்ட்ரி கொடுப்பார். இந்நிலையில் பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் நிலையில் கிரேட் காளியின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவரது வேடத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. அதேசமயம், காளியின் உயரத்திற்கும், உடல்வாகுவிற்கும் சுஷாந்த் சரிப்பட்டு வருவாரா என்று தெரியவில்லை.