பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ஹிந்தி படமான நியூட்டன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இதில் ஹாலிவுட் படங்கள் தவிர்த்து பிற நாட்டு படங்களும் பங்கேற்கும். அந்த வகையில் இந்தாண்டு, இந்தியா சார்பில் ஹிந்தி படமான நியூட்டன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நக்சல் பாதித்த பகுதிகளில் தேர்தலை முறையாக நடத்த அரசு அதிகாரி ஒருவர் எடுக்கும் முயற்சியே படத்தின் ஒன் லைன் கதை. ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அமித் வி மஷுக்கர் இயக்கியுள்ளார். இப்படம் இன்று(செப்.,22) வெளியாகி உள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன.
படம் வெளியான அன்றே ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் நியூட்டன் படம் பரிந்துரை செய்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூட்டன் படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறது.