ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்திற்கு பிறகு பண்ணையாரும் பத்மினியும், ஹரிதாஸ், உன் சமையல் அறையில் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சினேகா, தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதையடுத்து கன்னடத்தில தர்ஷன் நடிக்கும் குருக்ஷேத்ரா என்ற சரித்திர படத்திலும் தற்போது நடித்து வருகிறார் சினேகா.
மகாபாரத கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் திரளபதி வேடத்தில் நடிக்கிறாராம் சினேகா. மேலும், 2006ல் கன்னட ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக ரவி சாஸ்திரி என்ற படத்தில் நடித்துள்ள சினேகா, பின்னர் பிரகாஷ்ராஜூடன் நடித்த உன் சமையல் அறையில் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியானது. அதையடுத்து இப்போது இந்த குருக்ஷேத்ரா படம் மூலம் மீண்டும் கன்னடத்திற்கு சென்றுள்ளார் சினேகா.