பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
குஜராத் மாநிலத்தின் பல நகரங்களில் நடிகை சன்னி லியோன் படத்துடன், காண்டம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், நவராத்திரியில், காதலுடன் விளையாடுங்கள் என்ற பொருளில், குஜராத்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் முக்கியமான பண்டிகைளில் நவராத்திரியும் ஒன்று. சிறப்புவாய்ந்த இந்த பண்டிகையை இழிவுபடுத்தும் வகையில் காண்டம் விளம்பரத்தை ஒப்பிட்டு விளம்பரப்படுத்தியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
காண்டம் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், கவர்ச்சி நடிகை, சன்னி லியோன் படத்துடன் விளம்பரம் வெளியிட்ட தனியார் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானுக்கு, அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், நவராத்திரி பண்டிகையை இழிவுபடுத்தும் வகையில், காண்டம் விளம்பரத்துக்காக நடிகை சன்னி லியோன் படத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும்படியும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.