தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
விஷால் - லிங்குசாமி கூட்டணியில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஆக்ஷ்ன் படம் சண்டக்கோழி. இதன் இரண்டாம் பாகம் 12 ஆண்டுகள் கழித்து இப்போது உருவாகி வருகிறது. இதன் படபிடிப்பு இன்று(செப்., 20) பாடல்காட்சியுடன் ஆரம்பமானது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணி, விஷால் - இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில், விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார்.