விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி, மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படம் காலா. ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேக்கர், அஞ்சலி பாட்டில், சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண்டே, சம்பந்த ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வரும் நிலையில், ரஜினியிடம் தான் நிறைய விஷயங்களை கற்று கொண்டதாக ஹூமா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஹூமா கூறியிருப்பதாவது... "காலா படத்தில் ரஜினியுடன் எனக்கான காட்சிகள் ரொம்பவே ஸ்பெஷலானது. அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. நானும் கற்று வருகிறேன். அவர் ஒரு பெரிய ஸ்டார் நடிகர், அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை சிறப்பாக கருதுகிறேன்" என்றார்.