தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டின் தற்போதைய டிரண்டிங். ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங், குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள், தோனி, சச்சின், அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கை திரைப்படமானது. தற்போது டென்னிஸ் வீராங்கனை சாய்னா, பேட்மின்டன் வீராங்கணை சிந்து ஆகியோரின் வாழ்க்கை சினிமாவாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையும் சினிமாவாக தயாராக இருக்கிறது. 34 நான்கு வயதான ஜூலன் கோஸ்வாமி, 10 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய அணியின் வெற்றிக்கு பல முறை காரணமாக இருந்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 164 ஆட்டத்தில் 195 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
தற்போது இவரது வாழ்க்கையை சுசந்தா தாஸ் என்பவர் சினிமாவாக இயக்குகிறார். ஜூலனின் சொந்த ஊரான சக்தஹாலில் அவர் விளையாடியதிலிருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக கோப்பைக்கு விளையாடியது வரையிலான கதையுடன் படம் தயாராகிறது. ஜூலனின் கேரக்டரில் நடிக்க தகுந்த பாலிவுட் நடிகையை தேடி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.