இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் நடிக்கும் படம் 'ஸ்பைடர்' இம்மாதம் 27-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ஸ்பைடர் படத்தை தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர். ஸ்பைடர் தெலுங்குப் படத்தை சில தினங்களுக்கு முன் சென்சாருக்கு அனுப்பினார்கள். சென்சாரில் 'U/A' சர்டிஃபிக்கேட் வழங்கப்பட்டுள்ளது.
'ஸ்பைடர்' படத்தின் ரன்னிங்டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள். மகேஷ் பாபு நடிக்கும் முதல் நேரடித்தமிழ் படம் என்று மார்க்கெட்டிங் செய்யப்பட்டுள்ளதால் ஸ்பைடர் தமிழ் பதிப்புக்கு அவரே சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியுள்ள 'லைகா புரொடக்ஷஸ்' தமிழகம் முழுக்க தானே தியேட்டர்களை எடுத்து சொந்தமாகவே வெளியிடுகிறது.
ஹரஹர மகாதேவகி உட்பட செப்டம்பர் 27 அன்று ஏராளமான படங்கள் வெளிவருவதால் ஸ்பைடர் படத்துக்கு குறைந்த பட்சம் 200 தியேட்டர்களையாவது பிளாக் பண்ண வேண்டும் என்று மீடியேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது.