பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள'. இந்தப்படத்தில் கதாநாயகி என்றாலும், இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமியை விட நிவின்பாலியின் தங்கையாக படம் முழுதும் வரும் அஹானா கிருஷ்ணா தான் அதிக காட்சிகளில் நடித்திருந்தார். ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். காவலன், தெய்வத்திருமகள், முகமூடி, மனிதன் ஆகிய படங்களில் நடித்த மலையாள குணச்சித்திர நடிகரான கிருஷ்ணகுமாரின் மகள் தான் இந்த அஹானா.
பஹத் பாசிலின் தம்பி பர்ஹான் பாசில் முதன்முதலாக அறிமுகமான 'நான் ஸ்டீவ் லோபஸ்' என்கிற படத்தில் தான் ஆஹானா கிருஷ்ணாவும் அறிமுகமானார். அதன்பின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தில் நிவின்பாலிக்கு தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் ஒப்புக்கொண்டு நடித்தார்.
தற்போது அவரைத்தேடி மீண்டும் கதாநாயகி வாய்ப்பு வந்துள்ளது. முன்னணி ஹீரோவாக மாறிவரும் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக 'லூக்கா' என்கிற படத்தில் நடிக்கிறார்.. ரொமாண்டிக் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப்படத்தை அருண்போஸ் என்பவர் இயக்குகிறார்.