'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹசீனா பர்கர் படத்தை இயக்கியவர் அபூர்வா லகியா. இவர் நடிகர் சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பர். அபூர்வா இயக்கிய ஹசீனா பர்கர் படமும், சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படமும் வரும் செப்டம்பர் 22 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவி்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரு படங்களுக்கும் இடையே மோதல் வேண்டாம் என்பதற்காக ஹசீனா பர்கர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் படி தனது நண்பர் அபூர்வாவிடம் சஞ்சய் தத் கேட்டுள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை அபூர்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது படம் ரிலீசை கண்டு சஞ்சய் தத் எதற்காக பயப்பட வேண்டும்?
எனது படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது தான் பூமி படம். எனது படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட படம். கதை, கதாபாத்திரங்கள் என முற்றிலும் வேறுபட்டவை. எனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பது பற்றி சஞ்சய் தத்திடம் இருந்து எனக்கு எந்த தொலைப்பேசி அழைப்பும் வரவில்லை. இரண்டு படங்களுமே வெற்றி அடைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்றார்.