மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த வெள்ளாவி பொண்ணு டாப்சி, இப்போது பாலிவுட்டில் சில படங்கள் ஹிட் அடித்ததால் பாலிவுட்டே கதி என்று இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஜூட்வா 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் டாப்சி, அடுத்தப்படியாக ஷாத் அலி இயக்கத்தில், தில்ஜித் தோஸ்னா ஜோடியாக நடிக்க உள்ளார்.
இப்படம், முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் காதல் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில், சந்தீப்பாக தில்ஜித் நடிக்க, அவரின் காதலியாக டாப்சி நடிக்கிறார். இப்படத்தில் டாப்சியும் ஒரு ஹாக்கி வீராங்கனையாக நடிக்க உள்ளார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை சினேகா ரஞ்சனி தயாரிக்கிறார்.