இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரேஸ் படங்களின் வரிசையில் மூன்றாவது பாகமாக ரேஸ் 3 உருவாக இருக்கிறது. சல்மான் ஹீரோவாகவும் நடிக்கிறார். கார் ரேஸை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாக உள்ளது. ரெமோ டிசோசா இயக்குகிறார். சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். முந்தைய பாகங்களில் ஜான் ஆபிரஹாமின் ரோல் மிகவும் பவர்புல்லான ரோலாக இருந்தது. அந்தரோலில் ஜானையே நடிக்க வைக்க தயாரிப்பாளர் ரமேஷ் எண்ணினார். ஆனால் சல்மானுக்கும், ஜானுக்கும் இடையே பிரச்னை இருப்பதால் அவரை நடிக்க வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் இப்போது அந்த ரோலில் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை நடிக்க வைக்கலாம் என சல்மான் யோசனை தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, சித்தார்த்திடம் படக்குழு பேசி வருகிறார்கள். அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அவர் நடிக்க சம்மதம் சொல்வார் என தெரிகிறது.