பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சின்னத்திரை நட்சத்திரம் டிடி. காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். தற்போது அன்புடன் டிடி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் டிடி நிகழ்ச்சி என்றால் ஆர்வமாக பங்கேற்பார்கள். காரணம் நிகழ்ச்சியை அவர் நடத்தும் விதம், கேட்கிற கேள்விகள், முக்கியமாக அவரது கலகல சிரிப்பு எல்லாம் அவர்களுக்கு பிடிக்கும். சினிமாவில் அனைவரையும் அறிந்த டிடியை சிலர் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்தார்கள். ஆனால் சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் தனுஷ் தனது பவர்பாண்டி படத்தில் டிடியை நடிக்க வைத்து விட்டார். தனுஷ் நெருங்கிய நண்பர் என்பதால் மறுக்க முடியாமல் நடித்தார் டிடி. அதில் நடித்த பிறகு டிடிக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. நல்ல கதையும் கேரக்டரும் கிடைத்தால் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். படம் முழுக்க வருகிற பெரிய கேரக்டராம். இதில் நடிப்பதோடு புதிய படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். இதற்காக அன்புடன் டிடி நிகழ்ச்சிக்கு சில மாதங்கள் பிரேக் கொடுத்துள்ளார். இனி டிடியை சின்னத்திரையை விட பெரிய திரையில்தான் அதிகமாக பார்க்கலாம் என்கிறார்கள்.