இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள இயக்குனர் ராஜகிருஷ்ணன் மேனன் என்பவர் இயக்கியுள்ள 'செப்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் சைப் அலிகான். இந்த ராஜகிருஷ்ண மேனன் தான் இந்த வருடம் அக்சய் குமாரை வைத்து 'ஏர்லிப்ட்' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டவர். கதைப்படி, மும்பை ஹோட்டல் ஒன்றில் 'செஃப்' ஆக வேலை பார்க்கும் சைப் அலிகான் அங்கே வேலையைவிட்டு நீக்கப்படுகிறார்.. பின்னர் ஊர் ஊராக சென்று உணவுத்திருவிழா நடத்தும் கூட்டத்தில் சேர்கிறார்..
அப்படி ஊர் ஊராக சுற்றி வரும் சைப் அலிகான் கேரளாவிலும் வந்து சில நாட்கள் முகாமிடுவதாக கதை நகர்கிறதாம்.. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பத்மப்ரியா. கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் மனைவி கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இந்தப்படம் முழுக்க உணவுத்திருவிழா போல சமையல் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.