இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இறுதிச்சுற்று மூலம் மீண்டுமொரு வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கும் நடிகர் மாதவன், தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். அப்படியாக இவர் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடிக்கும் பேனி கான் படத்தில் நடிப்பதாக இருந்தது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்திலிருந்து மாதவன் விலகியுள்ளார். இதுப்பற்றி மாதவன் கூறுகையில்...
பேனி கான் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடிக்க ஆசை தான், ஆனால் கால்ஷீட் பிரச்னையால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியாத சுழல் ஏற்பட்டிருக்கிறது. பேனி கான் படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
மாதவன் விலகியதை அடுத்து இப்போது அவரது வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார். பேனி கான் படத்தை அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்க உள்ளார். ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா தயாரிக்கிறார்.