மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சைப் அலிகான் நடிப்பில் வெளியான படங்கள் ரேஸ் மற்றும் ரேஸ் 2. இரண்டு படங்களையும் அபாஸ் முஸ்தான் இயக்கினார். இரண்டும் வெற்றி பெற்றன. இப்போது ரேஸ் 3 உருவாக உள்ளது. இதில் சைப் அலிகான் நடிக்கவில்லை, சல்மான் நடிக்கிறார். அதேப்போன்று இயக்குநரும் மாற்றப்பட்டுள்ளார்.
ரேஸ் 3யில் நடிக்காதது குறித்து சைப் அலிகான் கூறியிருப்பதாவது... "ஓராண்டுக்கு முன்னரே தயாரிப்பாளர் ரமேஷ் தருணி, ரேஸ் 3 படத்தை புதிய நடிகர்கள், புதிய கதைக்களம் கொண்டு உருவாக்க போவதாக சொன்னார். ரேஸ் 3யில் சல்மானை விட வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது. புதிய ரேஸ் 3 குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். அதேசமயம் இந்தநேரத்தில் நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ரேஸ் 3யில் நடிக்க சொல்லி என்னை யாரும் அணுகவில்லை" என்றார்.
ரேஸ் 3 படத்தை ராஜா கிருஷ்ணா மேனன் இயக்க உள்ளார். கார் ரேஸை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ள இப்படத்தை பூஷண் குமார் மற்றும் ரமேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள்.