ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த 10 பேரில் 8 நடிகர்களும் 2 நடிகைகளும் உள்ளனர். அந்தப் பட்டியலின் படி முதலிடத்தில் ஷாரூக்கான் உள்ளார். இரண்டாவது இடத்தில் சல்மான் கான், மூன்றாவது இடத்தில் அக்ஷ்ய் குமார், நான்காவது இடத்தில் ஆமீர்கான், ஐந்தாவது இடத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் உள்ளனர்.
முதல் 5 இடங்களை நடிகர்கள் பிடித்துள்ள நிலையில், ஆறாவது இடத்தை நடிகை தீபிகா படுகோனே பிடித்துள்ளார். ஏழாவது இடத்தில் ரன்வீர் சிங், எட்டாவது இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா, ஒன்பதாவது இடத்தில் அமிதாப்பச்சன், பத்தாவது இடத்தில் ரன்பீர் கபூர் ஆகியோர் உள்ளனர்.
முதலிடத்தைப் பிடித்துள்ள ஷாரூக்கானின் ஆண்டு வருமானம் 243 கோடி. இரண்டாவது இடத்தில் 236 கோடியுடன் உள்ள சல்மான் கானை விட அவர் 7 கோடிகள் மட்டுமே அதிகம் சம்பாதித்திருக்கிறார். 224 கோடியுடன் அக்ஷய் குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆமீர்கான் 80 கோடிகளுடன் நான்காவது இடத்தையே பிடித்துள்ளார்.
ஏழாவது இடத்தைப் பிடித்துள்ள நடிகை தீபிகா படுகோனே 70 கோடியுடனும், 9வது இடத்தைப் பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா 64 கோடியுடனும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மூத்த நடிகரான அமிதாப்பச்சன் 57 கோடிகளுடன் 9வது இடத்தில் மட்டுமே உள்ளார்.
இந்த தகவல்கள் அவர்களுடைய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுன் 1ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜுன் 1ம் தேதி வரையிலான நிலவரம் இது.