பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'விவேகம்' படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 தியேட்டர்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலும் எந்த ஒரு தமிழ்ப் படமும் வெளியாகாத அளவிற்கு இந்தப் படத்தை 90 சதவீத தியேட்டர்களில் வெளியிடும் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்த 2017ம் ஆண்டில் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் இப்படி ஒரு எதிர்பார்ப்பு ஏற்படவில்லை. இந்த வருடத்தில் இதுவரையிலும் எந்த ஒரு தமிழ்ப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஜிஎஸ்டியால் உயர்ந்த டிக்கெட் விலை உட்பட பல காரணங்கள் இருப்பதால் மக்களின் தியேட்டர் வருகை குறைந்துவிட்டது. அதை 'விவேகம்' படம் முறியடித்து மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கும் என நம்புகிறார்கள்.
அமெரிக்காவில் இப்படம் சுமார் 330 தியேட்டர்கள் வரை வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படத்தை அங்கு வெளியிடுகிறார்கள். பல தியேட்டர்களில் முன்பதிவு ஆரம்பமாகிவிட்டது. ரஜினியின் படங்களுக்குப் பிறகு அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்திற்கு அங்கும் எதிர்பார்ப்பு அதிகம் என்கிறார்கள்.
உலகம் முழுவதும் இதுவரை தமிழ்ப் படங்கள் வெளியாகாத பல நாடுகளிலும் படம் வெளியாவதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்ப்படங்களின் வெளியீட்டு எல்லை 'விவேகம்' படம் மூலம் இன்னும் அதிகமாவது திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.