‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழில் வெற்றிபெற்ற, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான 'அப்பா'.. இந்தப்படம் தான் இப்போது மலையாளத்தில் 'ஆகாச மிட்டாயி' என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.. பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்தில் ஒரு படம் ரீமேக் ஆவது என்பது அபூர்வம்.. இதற்குமுன் சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் படம் அந்த சாதனையை செய்திருந்தது.. இப்போது அதே சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்திற்கு அந்த கெளரவம் கிடைத்துள்ளது. வரும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்தப்படம் வெற்றிபெற இயக்குனர் வெங்கட பிரபு, நடிகர் சிவா (இவர்கள் எல்லாம் சரோஜா'வில் ஜெயராமுடன் இணைந்து பணியாற்றியவர்கள்) ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.. மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் இந்த ஓணம் பண்டிகையில் ரிலீசானாலும் தனது கதையின் மீதுள்ள நம்பிக்கையில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார் சமுத்திரக்கனி.
படத்தின் கதாநாயகனாக ஜெயராம் நடித்துள்ளார். கதாநாயகியாக இனியா நடித்துள்ளார். தம்பி ராமையா கேரக்டரில் கலாபவன் சாஜன் நடித்துள்ளார். ஒரு நடிகராக மலையாள சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துவிட்ட சமுத்திரக்கனி, இந்த 'ஆகாச மிட்டாயி' படத்தின் மூலம் ஒரு படைப்பாளியாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஒரு இயக்குனராகவும் மலையாள சினிமாவில் தனது முத்திரையை அவர் பதிப்பார் என நம்புவோம்.