தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நாயகனாக நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் இசை வெளியீடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் பேச்சு அவர் பேசி முடித்த சில நிமிடங்களிலேயே 'மீம்ஸ்கள்' ஆக உருவாக ஆரம்பித்தன. அவரைக் கிண்டலடித்து நேற்று காலை முதல் பல கிண்டலான வீடியோக்களும் வெளிவந்தன.
'மாஸ், சிஎம், ஆளப் போறான்' என பார்த்திபன் பேச்சில் இருந்த சில விஷயங்கள் அஜித் ரசிகர்களை கடுமையாகக் கோபப்பட வைத்துள்ளன. சனிக்கிழமையன்று அஜித் தரப்பிலிருந்து மனவருத்தம் தெரிவித்து சட்ட ஆலோசகர் மூலம் அறிக்கை வந்தாலும், அஜித் ரசிகர்கள் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்பது பார்த்திபனை விமர்சித்ததில் இருந்து தெரிகிறது.
'விவேகம்' படம் இன்னும் இரு தினங்களில் வெளிவர உள்ள நிலையில் வேண்டுமென்றே அஜித்தை சிலர் சீண்டிப் பார்ப்பதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பார்த்திபனின் 'மெர்சல்' பேச்சும் அவர்களைக் கோபப்பட வைத்ததால் அவரைப் பற்றி பல கமெண்ட்டுகளை நேற்று பதிவிட்டுள்ளனர். இதனால், வருத்தப்பட்டுள்ள பார்த்திபன் அவருடைய முகப் புத்தகத்தில் அஜித்தைப் புகழ்ந்து பேசி அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
“காசுக்கு மாரடிக்காத
Mass-ஆன பேச்சுக்கு
மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது
இதுவே முதன்முறை !
வாயார/மனதார வாழ்த்துவது
என் மேடை நாகரீகம்.
அவர் அழைத்தாலும்
தலை நிமிர இப்படி சொல்வேன்.
"வேகத்தை விட
விவேகம் பெருசு-ஆனா
விவேகத்தை விட
அஜீத்தே பெருசு!"-நான்
கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன்.ஆனால்
சினிமாவுக்கு மட்டுமே ரசிகன்.
ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?)
வாழப்போறான் விவசாயி-அதுவே
நம்பிக்கை நிறைந்த என் பேச்சின்
மெரஸலான மெசேஜ் !,” என முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இருந்தாலும் அஜித் ரசிகர்கள் பார்த்திபனை எதிர்க்கும் அவர்களது கமெண்ட்டுகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை.