துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சமீபத்தில் சல்மான் கான் நடித்த டியூப்லைட் படமும், ஷாரூக்கான் நடித்த ஜப் ஹாரி மெட் சஜல் படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவின. இதுப்பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் கபீர்கானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... சல்மான் கான் எப்போதும் ஷாரூக்கானின் படம் என்ன வசூலிக்கிறது என்று பார்க்க மாட்டார். இருவருமே சூப்பர் ஸ்டார்கள் தான். இருவருக்கும் சினிமாவில் ஒரு தனியிடம் உள்ளது. சில படங்கள் நன்றாக போகும், சில படங்கள் அப்படி போகாது. ஆனால் இருவருமே மிகப்பெரிய ஸ்டார் நடிகர்கள். இருவருக்கும் இடையே போட்டி போன்று உருவாக்கியது மீடியாக்கள் தான். பாக்ஸ் ஆபிஸ் பற்றி சல்மான், ஷாரூக் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.