பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ஜூட்வா 2. 20 ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் நடிப்பில் வெளியான ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகமாக இப்போது உருவாகி இருக்கிறது. வருணின் தந்தை டேவிட் தவானே இயக்க, சாஜித் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய வருண் தவான்...
ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும், அப்படியில்லை என்றால் நிச்சயம் பிரச்னை தான். என் படத்தை எப்போதும் ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றே விரும்புகிறேன். என்னுடைய படங்களில் சில பொழுதுபோக்கு விஷயங்கள் இருக்கும். இங்கு நான் ரசிகர்களுக்காக தான் படம் பண்ணுகிறேன். அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை என்றார்.
ஜூட்வா படம் வருகிற செப்., 29-ம் தேதி ரிலீஸாக உள்ளது.