தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் 90 சதவீத தியேட்டர்களில் விவேகம் திரைப்படம் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் இப்படத்தையே திரையிட அந்தந்த தியேட்டர் நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளார்களாம். அது மட்டுமல்ல சிறிய சிறிய ஊர்களில் இருக்கும் சின்னத் தியேட்டர்களில் கூட விவேகம் வெளியாகும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களைக் காட்டிலும் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. அதை யு டியூபில் இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகிவற்றிற்குக் கிடைத்த வரவேற்பே நிரூபித்துள்ளது. மேலும் படம் வியாழக்கிழமை வெளியாவதாலும், அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதாலும் முதல் வார இறுதிக்குள்ளாகவே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பலரும் தியேட்டர்களில் முன்பதிவு செய்துள்ளார்கள்.
காலைக் காட்சிகளுக்கு முன்பாகவே விடியற்காலை 5 மணி காட்சி, 8 மணி காட்சி ஆகியவற்றிக்கு பலர் அனுமதி வாங்கிவிட்டார்களாம். சென்னையில் இன்னும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் முன்பதிவு ஆரம்பமாகாமல் உள்ளது. அதனால், அந்தத் தியேட்டர்களில் எப்படியும் டிக்கெட் முன்பதிவு செய்துவிடலாம் என அஜித் ரசிகர்கள் இணையதளங்கள் முன்பு காத்துக் கிடக்கிறார்கள்.
டிக்கெட் முன்பதிவிலேயே பல கோடிகளை வசூலித்துள்ள விவேகம் படம் வெளியான நான்கு நாட்களுக்குள் 100 கோடியைக் கண்டிப்பாகக் கடந்துவிடும் என்றே திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.