'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 151வது படமான 'சைரா' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதோடு ஒரு முக்கியமான ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறார்.
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்மரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் தயாராக உள்ளது. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வந்தனர். ஆனால், அது பற்றிய எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் இருந்தனர். ரகுமான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் வரை அது பற்றிய அறிவிப்பை வெளியிடத் தயங்கினர். தற்போது ரகுமான் படத்திற்கு இசையமைக்க சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டதால் இன்று வெளியான போஸ்டரில் ஏ.ஆர்.ரகுமான் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை தெலுங்கில் தயாரிப்பதோடு தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.