'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி |
தற்போது மோகினி, கர்ஜனை, சதுரங்கவேட்டை-2, 96 என பல படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இந்த படங்களில் அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள மோகினி, கர்ஜனை படங்களின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.
மேலும், அரவிந்த்சாமியுடன் இணைந்து திரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை-2 படத்தின் இறுதிகட்ட பணிகளும் தற்போது முடிந்து விட் டது. அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தற்போது அப்படத்தின் தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
முக்கியமாக, சதுரங்கவேட்டை-2வில் நடித்துள்ள அரவிந்த்சாமி, திரிஷா, பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளதாம். குறிப்பாக, திரிஷா ஒரு நேரத்தில் அங்கு முன்னணி நடிகையாக இருந்தவர் என்பதால், அவருக்கு இந்த படம் நாயகி படத்திற்கு பிறகு ஒரு நல்ல என்ட்ரியாக அமையும் என்கிறார்கள்.