மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நெஞ்சை பஞ்சராக்கும் ஊசி பார்வை.. முள்ளில்லா ரோஜா இதழ் வழியாய் வசிய மருந்தாக வெளியாகும் சிரிப்பு.. வழுக்கும் கால்கள் அல்ல, இரு வெள்ளி துாண்கள்.. கடைக்கண் பார்வை பட்டால் சிந்தும் மணி போல் இளசுகளின் இதயத்தை சிதறடிக்க புதிய புயலாய் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் மூலம் புதுமுகமாய் அறிமுகமான
நடிகை சந்தியா சீனிவாசன் தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக புன்னகையுடன் உதிர்த்த முத்துக்கள்..
உங்களை பற்றி...
சென்னை சொந்த ஊர். எத்திராஜ் கல்லுாரியில் பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முடித்தவுடன் மாடலிங் பண்ண வந்து விட்டேன்.
குடும்ப பின்னணி...
அம்மா, அப்பா வங்கி ஊழியர்கள். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. அதனால் செல்லம் அதிகம். எந்த முடிவுகள் எடுத்தாலும் எனது தீர்ப்பே இறுதியானது.
நடிப்பு துறை ஏன்..
கல்லுாரியில் படிக்கும்போதே பேஷன் ஷோக்களில் பங்கேற்று உள்ளதால் மாடலிங் துறை தான் நமக்கு என முடிவு எடுத்து விட்டேன்.
மறக்க முடியாத நபர்கள்...
எனது பிரண்ட்ஸ் தான். பிரித்வ், சக்ரித் கிருஷ்ணா, மவுனிகா, சுருதிமேனன் அனைவரும் என்னை மாடலிங் துறைக்கு கொண்டு சென்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இது என்ன மாயம் படம் மூலம் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அடுத்த படங்கள்...
வி.ஐ.பி. 2 படத்தில் கஜோலுக்கு செகரட்டரியாகவும், சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்தில் புரோட்டா சூரியின் மனைவியாகவும் திட்டம் போட்டு திருடற கூட்டம் என அரை டஜன் படத்தில் நடித்து வருகிறேன்.
வி.ஐ.பி. 2 பற்றி..
தனுஷ் ரொம்ப சுவீட். எவ்வளவு திறமை அவருக்குள்ள இருக்குன்னு அவர் கூட நடிக்கிறவங்களுக்கு தான் தெரியும். நடிக்கிற மாதிரியே இருக்காது, முகபாவனையில் அத்தனையும் சொல்லி விடுவார்.
பொழுதுபோக்கு..
புளுகிராஸ் உறுப்பினர் என்பதால், நாய்கள், பூனைகளை எங்கு பார்த்தாலும் அதற்கு உணவு அளிப்பது தான் முக்கிய பொழுதுபோக்கு. அது தவிர நண்பர்கள் கூட அரட்டை அடிப்பது தான்.
பிடித்த இயக்குனர்..
வசந்த் தான். ரிதம் படம் பார்த்ததில் இருந்து அவரது தீவிர ரசிகை நான்.
பொறாமைப்படும் நடிகை..
மாதுரி தீட்ஷித். தெய்வீகமான அழகு, கலர், திறமை என அடுக்கிட்டே போகலாம்.
கவர்ந்த பெண்மணி...
என் பாட்டி இந்திரா தான். எனது ஒவ்வொரு வெற்றிக்கும் அவர் தான் பக்கபலம்.
நடிக்க ஆசைப்படும் ஹீரோ..
ரஜினிகாந்த் தான். அவருடன் ஒரு சீன் நடிச்சாலும் போதும். சிறு வயதில் இருந்தே அவரது ரசிகை.
கிளாமர் பற்றி...
எல்லா நடிகைக்கும் கிளாமர் கண்டிப்பா முக்கியம். மாடர்ன் டிரஸ் தான் கிளாமர்ன்னு நினைக்கிறாங்க. எந்த உடையிலும் கிளாமர் பண்ணலாம். அவரவர் உடலுக்கு ஏற்ற உடையில் கிளாமர் பண்ணினால் தப்பில்லை.
எதிர்கால திட்டம்..
ஆதரவு இல்லாத குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கணும். இது தான் லட்சியம்.