கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் நடிப்பில், ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் கடந்தவாரம் வெளியான படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". வீட்டுக்கு வீடு கழிப்பறை அவசியம் என்ற கருத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் வசூல ரூ.100 கோடியை நெருங்கிவிட்டது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் டாய்லெட் படம் ரூ.96.05 கோடி வசூலித்திருக்கிறது. இன்னும் இரண்டு-மூன்று தினங்களில் ரூ.100 கோடி வசூலை எட்ட இருக்கிறது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட டாய்லெட் படம் வெளியிட்ட அனைவருக்கும் நல்ல லாபத்தை தந்திருக்கிறது.