சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
தர்மேந்திரா அவரது மகன்கள் சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான படம் யமலா பகலா தீவானா. இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வந்தது. ஆனால் தோல்வியை தழுவியது. இப்போது யமலா பகலா தீவானா-3 உருவாகி வருகிறது. பஞ்சாப் இயக்குநர் நவனீத் சிங் இயக்க, சன்னி தியோல் மற்றும் ஜெயந்திலால் கதா இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கியது. இப்படத்தில் கிர்த்தி கர்பந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார். அவரிடம் பேசி வருகின்றனர். அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டிலோ வெளியிட திட்டமிட்டுள்ளனர்.