இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராஜமவுலியின் பாகுபலி-2 படத்தில் நடித்து முடித்த பிரபாஸை உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க வைக்க சில தெலுங்குப்பட நிறுவனங்கள் துரத்தின. ஆனால் அவரோ, எனக்கு சிலகாலம் ஓய்வு தேவைப்படுகிறது என்று சொல்லி, கடந்த ஆறு மாத காலமாக ஓய்வில் இருந்து வந்தவர், தற்போது ரன் ராஜா ரன் தெலுங்கு படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் சாஹோ படத்தில் நடிக்கிறார்.
மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். இந்த சாஹோ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கினாலும், பின்னர் ஐரோப்பா, அபிதாபி, ருமேனியா ஆகிய நாடுகளில் நடக்கிறது. ஆக்சன் கதையில் உருவாகும் சாஹோ படத்திற்கு ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் சண்டை பயிற்சி கொடுக்கிறார்.