தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பழசிராஜா' படத்தில் பழசிராஜாவாக நடித்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. சொல்லப்போனால் அந்தப்படம் தான் சரத்குமார் அடுத்தடுத்து சில மலையாளப்படங்களில் நடிப்பதற்கான சிறந்த ஆரம்பமாகவும் அமைந்தது. அதை தொடர்ந்து மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ், தி மெட்ரோ, அச்சண்டே ஆண்மக்கள் என சில படங்களில் நடித்தார் சரத்குமார்.
தற்போது '36 வயதினிலே' இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் நிவின்பாலி நடிக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் மூலம் சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் சரத்குமார். அதுமட்டுமல்ல ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் வெளியான 'தி மெட்ரோ' படத்திலும் நிவின்பாலியும் சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாவதால் இந்தப்படத்தில் சரத்குமார் இடம்பெற்றுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.