அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், மெஹ்ரீன், விக்ராந்த் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு 'அறம் செய்து பழகு' என்ற தலைப்பை வைத்திருந்தனர். இப்போது படத்தின் தலைப்பை மாற்ற முடிவெடுத்துள்ளனர். புதிய தலைப்பு எது என்பதை இன்று மாலை அறிவிக்க உள்ளனர்.
'மாவீரன் கிட்டு' படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இந்தப் படத்தை கடந்த வருடம் ஆரம்பித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சந்தீப் கிஷன் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்துள்ள மெஹ்ரீன் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ராந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். தெலுங்கில் நாயகன் சந்தீப்பே வெளியிட உள்ளார்.
இப்படத்தின் புதிய தலைப்பை இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் இயக்குனர் சுசீந்திரனின் அப்பா நல்லுசாமி அறிவிக்கிறார். படம் விரைவில் திரைக்கு வருகிறது.