இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படம் முதலாவதாக ரிலீஸாக உள்ளது. அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த பூமி படத்தில் சஞ்சய் - அதிதி ராவ் இருவரும் அப்பா - மகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் சஞ்சய் தத் டைட்டில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ஜெய் மாதா தி என்று ஆரம்பிக்கும் இப்பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. விரைவில் பூமி பாடல்களும் வெளியாக உள்ளது. டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு போன்று பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய் தத், இதற்கு முன்னர் முன்னா பாய் உள்ளிட்ட படங்களிலும் பாடியிருக்கிறார்.
பூமி படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரித்துள்ளனர். படம் செப்., 22-ம் தேதி ரிலீஸாகிறது.