ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கர்நாடக மாநில அரசியல் பிரமுகர் ஜக்தேஷின் மகன், குரு ஜக்தேஷ். பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படமான 7ஜி ரெயின்போ காலனியின் கன்னட ரீமேக்கில் நடித்து புகழ் பெற்றவர். பெங்களூரு ஆர்.டி நகரில் வசித்து வரும் குரு, நேற்று தன் குழந்தையை காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பள்ளியின் முன்னால் காரை நிறுத்தி மகளை பள்ளிக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு இளைஞர் பைக்கை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். அவரை நிறுத்திய குரு, பள்ளி குழந்தைகள் நடமாடும் இடத்தில் இப்படி பைக்கை ஓட்டிவரலாமா என்று கண்டித்துள்ளார். அந்த இளைஞர் அப்படித்தான் வருவேன் என்று கூறியிருக்கிறார், இது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது திடீரென தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து குருவின் தொடையில் குத்திவிட்டு அந்த இளைஞர் தப்பியோடிவிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து குருவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
"தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்து எதுவும் இல்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். பள்ளி சிசிடிவி கேமரா புட்டேஜை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்" என்று குருவின் தந்தை ஜக்தேஷ் தெரிவித்தார்.