தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான படம் தான் '100°C' (1௦௦ டிகிரி செல்சியஸ்). வேலைக்குச்செல்லும் ஐந்து பெண்கள் ஒன்றாக தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் அவர்களது பிளாட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. அதை அவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைக்க முற்படுவதும், அதை தெரிந்துகொண்ட யாரோ ஒருவன் அந்த ஐந்து பேரையும் ஒருவர் அறியாமல் இன்னொருவரை மாறி மாறி பிளாக் மெயில் செய்வதும் தான் படத்தின் கதை.. ராகேஷ் கோபன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.
எந்த மொழிக்கும் செட்டாக கூடிய த்ரில்லர் வகையை சேர்ந்த இந்தப்படம் தமிழில் ரீமேக்காகும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறது.. இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார் மித்ரன் ஆர்.ஜவஹர்.. இந்தப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் இடம்பெறுகிறார்கள். அதில் முதன்மை கதாநாயகியாக ஸ்வேதா மேனன் நடித்திருந்த கேரக்டரில் தமிழில் அமலாபால் நடிக்கிறார் என தகவல் கசிந்துள்ளது. இந்தப்படத்தில் ரொம்பவே துணிச்சல் நிறைந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார் அமலாபால்..