Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சண்டக்கோழி நடிகர் மகன் மீதான புகாரை வாபஸ் வாங்கினார் நடிகை..!

13 ஆக, 2017 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Actress-withdraw-her-complaint-against-actor-son

சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகன் ஜூனியர் லால்.. இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக இருக்கிறார். அதான் ஏற்கனவே இயக்கிய வெற்றிப்படமான 'ஹனி பீ' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஹனி பீ-2' என்கிற பெயரில் இயக்கியிருந்தார்.. அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது.. இந்த நிலையில் அந்தப்படத்தில் நடித்திருந்த ஒரு இளம் டிவி நடிகை பத்து லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒரு தகவல் வெளியானது..

அதை தொடர்ந்து இயக்குனர் மீதும் அந்தப்படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஷி மற்றும் டெக்னீசியன்கள் மூவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தார் சம்பந்தப்பட்ட நடிகை. அந்தப்புகாரில் தனக்கு பதிலாக, தனது அனுமதி இல்லாமல் வேறு ஒரு பெண்ணை வைத்து சில காட்சிகளை எடுத்து படத்தில் இணைத்துவிட்டார்கள் எனவும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜூனியர் லால், தன்மீது தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தார் எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் அந்த நடிகை.


இந்த வழக்கில் ஜூனியர் லால் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகை இயக்குனர் மற்றும் மற்றவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதன்படி சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தாங்களே பேசி சுமுகமாக முடித்துக்கொண்டதாகவும், இனி இந்த விவகாரம் குறித்து தான் எந்த பிரச்சனையையும் எழுப்ப போவதில்லை எனவும் அவர் அதில் குறிப்பிட்டுளார். மேலும் இதை ஒரு அபிடவிட்டாக எழுதி ஜூனியர் லாலிடமும் ஒப்படைத்துவிட்டாராம் அந்த நடிகை.


Advertisement
சமுத்திரக்கனியின் படத்துக்கு குரல் கொடுத்த மோகன்லால்..!சமுத்திரக்கனியின் படத்துக்கு குரல் ... 100 °C  தமிழ் ரீமேக்கில் அமலாபால்..! 100 °C தமிழ் ரீமேக்கில் அமலாபால்..!


வாசகர் கருத்து (1)

s.rajagopalan - chennai ,இந்தியா
13 ஆக, 2017 - 18:08 Report Abuse
s.rajagopalan டிராமாக்காரங்க டிராமா போடுறாங்க சீக்கிரம் முடிஞ்சிருச்சு ...அதுதான் ....இருக்கட்டும் இன்னொன்று வராமலா போகும் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Julie 2
    • ஜூலி 2
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film Annadurai
    • அண்ணாதுரை
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : டயானா சம்பிகா
    • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in