'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வடிவேலுவின் கேரியரில் சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23ஆம்புலிகேசி முக்கியமான படம். சரித்திர கதையில் உருவான அந்த படத்தில் இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்திருந்தார் வடிவேலு. அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. விஜய்யின் புலி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கும் இந்த படத்திற்கான பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது.
மேலும், தற்போது விஜய்யுடன் மெர்சல் படத்தில் காமெடியனாக நடித்துள்ள வடிவேலு, இப்போது புலிகேசி-2வில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அதோடு, முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் வடிவேலுவின் கெட்டப் யூத்தாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் தனது எடையை குறைத்து உடம்பை ஸ்லிம் பண்ணியிருக்கிறாராம் வடிவேலு. இதற்காக கடந்த 3 மாதங்களாக அவர் கடும் டயட்ஸ் கடைபிடித்து வருகிறாராம்.