ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
அக்ஷ்ய் குமார் - பூமி பத்னேகர் நடிப்பில் ஒரு சமூக விழிப்புணர்வு படமாக வெளியாகியுள்ள படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. வீட்டுக்கு வீடு கழிப்பறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக வெளிவந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் படத்தின் வசூலும் முதல்நாளில் சிறப்பாக இருக்கிறது. முதல்நாளில் டாய்லெட் படம் ரூ.13.10 கோடி வசூலித்திருக்கிறது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான டாய்லெட் படம் உலகம் முழுக்க 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. டாய்லெட் படத்தை ஸ்ரீ நாராயன் சிங் இயக்கியுள்ளார்.