நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பைவ் ஸ்டார், அழகிய தீயே உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் பிரசன்னா. அப்படி அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் பின்னர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக தனது ரூட்டை மாற்றினார் பிரசன்னா. அந்த படம் வெற்றி பெற்றி பெற்று பிரசன்னாவின் வில்லன் நடிப்பு பேசப்பட்டது.
அதனால் அதையடுத்து நாயகன், வில்லன், கேரக்டர் என மாறி மாறி நடித்து வரும் அவர், சமீபத்தில் வெளியான நிபுணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது திருட்டுப்பயலே-2 படத்தில் அதிரடியான வில்லனாக நடித்திருக்கிறார். அதாவது, இணையதளத்தில் பெண்களிடம் நட்பு வளர்த்தும் பின்னர் அவர்களை அவர் எப்படி கேட்ச் பண்ணுகிறார் என்பதுதான் கதையாம். அந்த வகையில், இந்தபடம் அஞ்சாதேவுக்கு இணையாக பிரசன்னாவுக்கு பெயர் வாங்கிக்கொடுக்கும் என்கிறார்கள். தற்போது அனைத்துக்கட்ட பணிகளும் முடிந்துவிட்ட திருட்டுப்பயலே-2 படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.