பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷாரூக் கானுடன் நடித்து, சமீபத்தில் வெளியான, ஜப் ஹேரி மெட் சேஜஸ் படத்தில், தன் நடிப்புக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது, அனுஷ்கா சர்மாவை, உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
'சமீபகாலமாக, கவர்ச்சியான வேடங்களில் அதிகம் நடிப்பது இல்லையே' என, அவரிடம் கேட்டால், செல்லமாக முறைக்கிறார். 'நடிக்க வந்த புதிதில், மரத்தை சுற்றி, ஹீரோவுடன் டூயட் பாடும் கேரக்டர்களில் தான் நடித்தேன். ஆனால், எனக்கு இப்போது, நல்ல அனுபவம் கிடைத்து விட்டது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து, நடிக்க முடிவு செய்துள்ளேன். படத்தின் கதைக்கு அவசியம் என்றால், கண்டிப்பாக கவர்ச்சியாக நடிப்பேன்' என்கிறார், அனுஷ்கா.
'இந்த விஷயத்தில், என்னிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, என் நலம் விரும்பிகள் கூறுகின்றனர். இது, திடீர் மாற்றம் அல்ல; அனுபவத்தால் ஏற்படும் மாற்றம் தான்' என்கிறார், அனுஷ்கா.