விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
சிம்ரன், மனிகர்னிகா என பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கங்கனா. அதிலும், சமீபத்தில் மனிகர்னிகா படத்தின் ஷூட்டிங்கின் போது காயம் ஏற்பட்டு சிலவாரங்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிம்ரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை கங்கனா, செய்தியாளர்களிடம் பேசும்போது...
"எனது சினிமா பாதை, பயணம் மிகவும் வித்தியாசமானது. இந்த நிகழ்ச்சிக்கு விமானத்தில் வரும்போது கூட எனக்குள் பல்வேறு விஷயங்களை கேட்டு கொண்டதோடு, பல கேள்விகளையும் எனக்குள் எழுப்பினேன். ஆகையால் தான் எனது பயணம் அசாதாரணமானதாக இருக்கும். அதேசமயம் என் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் போராட்ட களமாக தான் இருக்கிறது. எதையும் போராடி தான் பெற வேண்டி இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை அது தான் எனது விதியோ தெரியவில்லை" என்கிறார்.
சிம்ரன் படத்தை ஹன்சல் மேதா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்., 15-ம் தேதி ரிலீஸாகிறது.