மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இரண்டு, மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட ஹசீனா படம் ஒருவழியாக செப்., 22-ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி உள்ளது. ஹசீனாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அபூர்வா லக்கியா இப்படத்தை இயக்கியுள்ளார்.
படம் ரிலீஸ் குறித்து இயக்குநர் அபூர்வா கூறியதாவது... ஒரு படத்தை அனைத்து தரப்பட்ட ரசிகர்களிடம் கண்டிப்பாக கொண்டு சேர்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் முக்கியமான வேலை. அதிலும், இதுபோன்ற படங்கள் கண்டிப்பாக அனைவரிடத்திலும் சேர வேண்டும். இப்படத்தை வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.