Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கழிப்பறை கட்டுவது அரசின் வேலை கிடையாது : அக்ஷ்ய் குமார்

09 ஆக, 2017 - 15:15 IST
எழுத்தின் அளவு:
It-is-not-Government-Job-to-make-Toilet---Akshay-Kumar

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக கழிப்பறையின் அவசியத்தை எடுத்துரைக்க வரும் இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்தும் அக்ஷ்ய் குமார் தினமலர் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டதாவது...

டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் எப்படிப்பட்டது?
டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் காமெடி, ரொமான்ட்டிக் சாங்ஸ், காதல், ஆக்ஷ்ன் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் இருக்கும். இரண்டரை மணிநேரம் ரசிகர்களை எல்லா விதத்திலும் கவரும். இப்படம் வாயிலாக நான் கருத்து எதுவும் சொல்லவில்லை, படம் பார்க்கும் ரசிகர்கள் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்று புரிந்து கொள்வார்கள். இரண்டரை மணிநேரத்தில் 20 நிமிடங்கள் தான் கொஞ்சம் சீரியஸாக செல்லும், 2 மணிநேரம் காமெடியாகவே படம் நகரும்.

படத்தில் எதைப்பற்றி பேசப்போகிறீர்கள்?
பல நல்ல விஷயங்களை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். குறிப்பாக ஒரு வீட்டிற்கு டிவி, பேன் போன்றவற்றை விட கழிப்பறை அவசியம் என்று உரக்க சொல்லியிருக்கிறோம். நம் நாட்டில் இன்னும் 54 சதவீத வீடுகளில் கழிப்பறை கிடையாது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அதிலும் கிராமப்பகுதியில் உள்ள பெண்களுக்கு வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால், சூரியன் மறைந்த பின்னரோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ சுமார் 3 கி.மீ, ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி செல்பவர்களை சில வக்கிர புத்திக்காரர்கள் போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவது என பல இன்னல்களை கொடுக்கின்றனர். இப்படி செய்பவர்கள் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகின்றனர். டாய்லெட் படம் நிச்சயம் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை தரும்.

என்ன தான் அரசு கழிப்பறை கட்ட பணம் ஒதுக்கினாலும் அது மக்களிடம் போய் சேருவதில்லையே, இதுப்பற்றி உங்கள் கருத்து?
கழிப்பறை கட்டி கொடுப்பது அரசின் வேலை கிடையாது. அரசு இதுபோன்ற விஷயங்களுக்கு உதவி அளித்தால் அது நல்ல விஷயம் தான். ஆனால் சில காரணங்களால் அது மக்களிடம் போய் சென்று சேருவது இல்லை. அதற்காக மக்கள் அப்படியே அதை விட்டுவிடக்கூடாது. தங்கள் வீட்டின் தேவைக்காக பல்வேறு விஷயங்களை செய்பவர்கள், கழிப்பறை கட்டவும் முன் வர வேண்டும். அரசை எதிர்பார்த்து காத்திருக்க கூடாது. அதேசமயம் சிலர் கழிப்பறை கட்டுவதற்காக அரசிடம் பணத்தை வாங்கிவிட்டு, அதை அதற்கு பயன்படுத்தாமல் கடை கட்டவும், தங்களின் தேவைக்கும் உபயோகித்து வருகிறார்கள், இதை என்ன சொல்வது...!

தமிழ் படமான ஜோக்கரின் காப்பி தான் டாய்லெட் என்று கூறப்படுகிறதே?
இது தவறான தகவல். டாய்லெட் படம் எந்த படத்தின் ரீ-மேக்கோ, காப்பியோ கிடையாது. உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. சமூக பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு தயாராகி இருக்கிறது. இதில் காதலும் உள்ளது. மேலும் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்மாதிரியாக கொண்டும் இப்படம் உருவாகி இருக்கிறது.

தொடர்ந்து நாட்டுப்பற்று தொடர்பான படங்களில் நடிப்பது ஏன்?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. எனக்கு வரும் பட வாய்ப்புகள் அப்படி தான் வருகின்றன. நான் நாட்டுப்பற்று தொடர்பான படங்களில் மட்டுமல்ல, ஹவுஸ்புல் 3 போன்ற காமெடி படத்திலும் கடந்தாண்டு நடித்தேன். தற்போது ரோபாட் 2(2.O) படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறேன். பேடுமேன் என்ற படத்தில் சீரியஸான ரோலில் நடிக்கிறேன். ஆகையால் நான் நாட்டுப்பற்று சார்ந்த படங்களில் மட்டுமே நடிக்கிறேன் என்று கூறி விட முடியாது.

மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சந்திப்போம், நன்றி என்று கூறி விடைபெற்றார் அக்ஷ்ய்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in