இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள "டாய்லெட் ஏக் பிரேம் கதா" படத்தில் அவரது மனைவியாக நடித்திருப்பவர் நடிகை பூமி பத்னேகர். இவர் அறிமுகமான முதல்படம் "தும் லகா கி ஹைசா". இப்படத்தில் குண்டு பெண்ணாக நடித்தவர், இப்போது அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம்மாகிவிட்டார்.
சமீபத்தில் டாய்லெட் படம் தொடர்பான புரொமோஷனில் பங்கேற்ற பூமி பத்னேகர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது... "உங்களுக்கு தெரியுமா... நான் குண்டாக இருந்தபோதும் ஆண்களின் பார்வை என் மீது இருந்தது. நான் குண்டாக இருக்கிறேன் என்று என்னை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. நான் என்ன மாதிரி உடை அணிய வேண்டும் என்பது என் விருப்பம். அதேப்போன்று கவர்ச்சியை வெளிப்படுத்துவதும் என் விருப்பம். என்னைப் பொறுத்தமட்டில் பெண்கள் விஷயத்தில் ஆண்களின் பார்வை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்" என்றார்.
டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது.