'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹாலிவுட் வரை சென்று விட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, மராத்தி மொழியில் படங்களும் தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் வென்ட்டிலேட்டர். இப்படம் இப்போது மலையாளத்தில் ரீ-மேக்காக உள்ளது. இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் தாயாரும், வென்ட்டிலேட்டர் படத்தின் தயாரிப்பாளருமான மது சோப்ரா கூறியிருப்பதாவது.. "வென்ட்டிலேட்டர் படத்தை மலையாளம் மொழியில் ரீ-மேக் செய்ய உள்ளோம். பிரியங்கா சோப்ராவே தயாரிப்பாளராக இருப்பார். அற்புதமான கதைகளுக்கு மலையாள சினிமா எப்போதும் வரவேற்பு தரும். தற்போது நடிகர்கள் தேர்வு, இயக்குநர் தேர்வு நடந்து வருகிறது. எல்லாம் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்" என்கிறார்.