கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
இம்சை அரசன் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை கககபோ. மிகவும் பிரபலமான இந்த காமெடி டயலாக்கில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து விட்டது. தற்போது ராஜ் டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய காமெடி நிகழ்ச்சிக்கு கககபோ என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் அன்றாட நாட்டு நடப்புகளை காமெடியாக்கி காட்ட இருக்கிறார்கள்.
இதில் ஜார்ஜ் நெல்சன், தங்கதுரை, தீபன், பழனிபட்டாளம், திவாகர் உள்ளிட்ட பல காமெடியன்கள் கலந்து கொண்டு கலக்க இருக்கிறார்கள். எல்லா சேனல்களும் காமெடி நிகழ்ச்சிகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருவதைப்போன்று தற்போது ராஜ் டி.வியும் களத்தில் இறங்கி உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 7ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.